Friday, October 17, 2008

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது!

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்! சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள்.
அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.
கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.
தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.
ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.
எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். "ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக" ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.
"பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு" என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் 'மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்' என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.
திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் 'மக்கள் பிரதிநிதிகள்' ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.
அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். "தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா.." என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். "குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!" என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது 'முதலாளித்துவம் ஒழிக!'
•••
இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். "கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…" (நாணயம் விகடன், அக்15)
எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.
அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை 'நெருக்கடி' என்று கூறுகின்றது முதலாளித்துவம்.
வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி' தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக் கடன்.
இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.
"வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்" என்று முடிவு செய்தார்கள்.
ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.
நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். 'ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். தயங்கியவர்களிடம், '10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்' என்று ஆசை காட்டினார்கள். 'வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்' என்று வலையில் வீழ்த்தினார்கள். 'அதுவும் கஷ்டம்' என்று மறுத்தால், 'பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்' என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.
இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் 'கடன் வேண்டுமா?' என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல 'வீடு வேண்டுமா?' என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.
ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. 'விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்' என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.
ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. 'ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ' என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.
விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் 'வீடு வேண்டாம்' என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.
•••
இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?
ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.
எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். "இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு" என்று கோருகின்றார்கள் மக்கள்.
திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.
ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.
பொதுவாக, கடன் என்பது 'கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்' மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.
இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு 'மிக நம்பகமான கடன்கள்' என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.
பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! 'இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக'ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், 'ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய' டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!
பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!
•••
நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை 'டர்ர்ர்' என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.
35 இலட்சம் கோடி 'மொய்'ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த 'சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்'துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ 'அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை' என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?
அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 'சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!' என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?
முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். 'கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது' என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?
"தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்" என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், "அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்" என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.
யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?
•••
தாங்கள்அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், 'போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்' ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?
பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். "ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்" என்று போதையூட்டினார்கள். "எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?" என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.
உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் 'மதிப்பை' ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் 'பொருளாதார வளர்ச்சி'. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!
"இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!
எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். 'உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே' மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். "வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்" என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.
•••
புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த 'அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி'யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!
அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், 'பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்' என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.
'புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
'அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்' என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. 'உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்' என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். 'மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே' என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!
அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, 'அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்' என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. 'எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக' உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.
இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!

Monday, September 8, 2008

ஒரு கவிதை

"கவிதையாய் காதலிக்க ஆசைப்பட்டவன் நான்...

ஒரு கவிதையை காதலிக்கும்படி ஆகிவிட்டது... "

Monday, August 11, 2008

காதல் கிறுக்கன்......

என்றும் போல் எவ்வித
மாற்றமுமின்றி பிறக்கும்இன்றைய நாட்களும்,
சுற்றமும்வரிகளுக்குள் விளக்க
முடியாதொருபுதுமையாய் நகர்கின்றன...
தனிமையும்,மௌனமும்,வெறுமையும் முழுமையும்
ஒருசேரஅமைந்த தன்மையுமாய்கடந்து செல்கின்றனதினசரிப் பொழுதுகள்...என்றோ விதைத்தஉன்னுடனான மிதிவண்டி
பயணங்கள்என் இருத்தலின் உண்மையைநினைவூட்டியபடியேநித்தமும் துளிர்க்கின்றன இன்றைய நினைவுகளாய்..
.மின்விசிறியின்எறிச்சலூட்டும்கீச்சிடும்
இரைச்சலைகூடரசிக்கபழகிக் கொண்டது
உள்ளமும்அவ்வழியேஏனைய உறுப்புகளும்...இப்பொழுதெல்லாம்இயற்கையோடு சண்டையிடுவதுஅன்றாடமாகிவிட்டது,
என்னவள் உன்னோடு ஒப்பிட்டவாறே!!கசக்கி
எறியப்பட்டகாகிதங்களுக்கு
நடுவேகண்ணீர் விட்டபடிஉன்னை
அலங்கரிக்க முடியா சாபத்தில்நிராகரிக்கப்பட்ட
வரிகள்...பரவாயில்லை...
காதல் கற்றுக் கொடுத்ததுநித்திரையிலும்
நகைக்கும்கிறுக்கன் என்ற பெயர் மட்டுமல்லகண்டபடி
கிறுக்கும் கவிஞன் என்ற பட்டமும்தான்!!!

அத்தை மகள்!!!





தாவணி ஊர்வலத்தில் முதன்முறைஒற்றை

தேவதையாய் நீ வந்திருந்தஓர் விடுமுறை

நாளில்எனைக் கண்டவுடன் உன் கால்

கட்டைவிரலால்தரையில் வடித்த

அரைவட்ட வெட்கம்...


படிப்பிற்காக நான் பட்டணம் கிளம்பியபோதுவெட்கமில்லாமல்

அழுதுநீ செய்த ஆர்பாட்டங்களைசுமந்து நிற்கும் தெருமுனை...


உன் விரல்பட்டு விடுதலையான‌'டா' போட்டழைத்த‌என் வகுப்புத்தோழியின்மிதிவண்டி சக்கர காற்று...


எல்லாம் முடிந்து போனஅக்கொடிய நாளில்யாருமறியாமல்மழையோடு கரைந்து போனஎன் கண்ணீர் துளிகள்...
தொலைந்து போன எதையோதேடியபோதுகண்ணீர் விதைத்துநினைவுகளையும் புரட்டிய‌துபழைய புகைப்பட தொகுப்பு...

அமெரிக்காவில் கைப்புள்ள...!!!



நம்மூரு பசங்க எல்லாரும் சாப்ட்வேருங்கிற பேருல அமெரிக்காவுல வந்து நைட் ஆனா புல் டைட்டா தண்ணில புரளுறாய்ங்களாம்! அப்புறம் அங்குள்ள வெள்ளக்காரப் புள்ளங்க கையப் புடிக்கிறாய்ங்களாம்! கறுப்புப் புள்ளங்களுக்கு முத்தம்லாம் கொடுக்குறாய்ங்களாம்! கேட்டா 'சாட்டர்டே நைட் பீவர்'ன்னு பிலிமு காட்டுறாய்ங்களாம்! அது மட்டுமில்லாம ஆர்குட், ப்ளாக்குன்னு டைம கண்ணா பிண்ணான்னு செலவு பண்றாய்ங்களாம்! இப்படி சின்னா பின்னான்னு சீரழிஞ்சிட்டிருக்குற பயபுள்ளங்கள திருத்தனும்னு இந்திய தூதரகத்துள இருந்து உங்கள அமெரிக்காக்கு அனுப்பப் போறாங்களாம் தல", இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் செய்யும் அட்டகாசங்களால் கடுப்பாகி, பாண்டி கத்திக் கொண்டிருக்கும்போதே கைப்புள்ள நெனப்பு வேறு எங்கோ சென்ற்து.
"எல்லாமே பயங்கர 'கிக்'கான மேட்டராவே இருக்குதே! அமெரிக்காவுல போன ஒடனே நம்ம பயபுள்ளைகள பாத்து நம்மலும் அந்த வித்தைகளை கத்துக்க வேண்டியதுதான்"
"டேய் பாண்டி, என்னடா சொல்ற? நான் அமெரிக்கா போயிட்டா நம்ம தமிழ் நாட்ட யாருடா பாத்துக்குவா?", நம்ம கைப்பு விட்டுக்கொடுக்காம பேசுற மாதிரி ஒரு ஆக்ட் விட்டாரு.
இதுதான் சான்ஸுன்னு நம்ம மூக்கன், "ஆமா, தல சொல்றது வாஸ்த்தவந்தான். தலைக்கு பதில்லா நான் போறேன்".
'ஆஹா! நமக்கே ஆப்பு அடிக்கிறானே இந்த மூக்கன்' கைப்பு சுதாரித்து, "டேய், இது என்ன சைக்கிளுக்கு காத்து அடிக்கிற சமாச்சாரமா? என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு!". கைப்பு ஆவேசமாய் கர்ஜித்தார்.
"சரி, நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்ல. நான் அமெரிக்கா போறேன்னு சொல்லிரு", நாயகன் கமல் போல கைப்பு சீன் போட்டார்.
"சிங்கம் களத்துல எறங்கிடிச்சி!", பொக்க வாயில வெத்தலயப் போட்டுகிட்டு, கத்திகிட்டு நின்னுச்சு அந்தப் பெருசு.
ஒருவழியாய் கைப்புள்ள, பாண்டி, மூக்கன், ராசுக்குட்டி எல்லாரும் அமெரிக்கா நியூயார்க் வந்து இறங்கிட்டாங்க. டைம் ஸ்கொயர் பக்கத்துல இருக்கிற பல மாடிக் கட்டடத்துல, மொட்ட மாடில ஒரு கொட்டாய்ப் போட்டு, 'வருத்தப்படாத வாலிபகர்கள் சங்கம்'னு ஒரு பெரிய போர்டு மாட்டி, சுறுசுறுப்பா தல தூங்கிட்டு இருந்தாரு. பாண்டி, பக்கத்துல இருக்குற தமிழ் நாட்டு ஹோட்டல்ல இருந்து, சங்கத்துப் பேரச் சொல்லி, மீந்து போன இட்லியும், கெட்டுப் போன கெட்டிச் சட்னியும் வாங்கிட்டு வந்தார்.
"டேய் மூக்கா, ராசு, ஓடியாங்கடா! நம்ம தல எடத்துல எவனோ படுத்துக் கெடக்குறான்டா!", பாண்டி கணைக்க, எல்லாரும் வந்து அந்த உருவத்த மொத்தி எடுத்தனர். அப்புறம்தான் தெரிஞ்சுது, அங்க படுத்துக் கிடந்தது வேற யாருமில்ல, நம்ம கைப்புள்ளதான்னு. குளிருல நடுங்கி, பாண்டிபஜார்ல படுத்துக் கிடந்த பிச்சக்காரன்கிட்ட திருடுன கிழிஞ்ச ஸ்வெட்டரும், மங்கி தொப்பியும் போட்டுட்டு தல தூங்கிட்டு இருந்ததுல பாண்டி கன்பியுஸ் ஆகி, இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் ஆகிப்போச்சு.
"ஏண்டா? ஏன் இந்த கொல வெறி? கொஞ்ச நேரத்துல என் சித்தப்பூ போன எடத்துக்கே என்னைய அனுப்பி வெக்க பாத்தீங்களடா?"
"அது வந்து தல... நீங்கன்னு தெறியாம...", ராசு இழுத்தான்.
"அதுதான் மூச்சுக்கு முன்னூறு தடவ, நாந்தான்னு சொன்னனடா?"
"அது..."
"பேசாத! பேசாத! பேசாத!" கைப்பு எல்லாருத் தலைலயும் நாலு தட்டு தட்டினார்.
அடுத்த நாள் காலைல, சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் வழக்கமான, இத்துப்போன கிழிஞ்ச பனியன், பட்டாப்பெட்டியில் வர, கைப்பு மட்டும் பனியன் தெரியிற மாதிரி ரோஸ் கலர் கண்ணாடி ஜிப்பா போட்டுக்கிட்டு, கைலிய பட்டாப்பெட்டி தெரியிற மாதிரி தூக்கிக் கட்டிக்கிட்டு சிங்க நடைப் போட்டுக்கிட்டு வந்தார்.
அப்போது மூக்கன் மூச்சித் தெரிக்க ஓடி வந்தான். "அண்ணே! அண்ணே! நீங்க இங்க இருக்குறத தெரிஞ்சிகிட்டு, கட்டதொர இங்கேயும் வந்துட்டான்ணே!"
"ஆஹா! வந்துட்டான்யா! வந்துட்டான்யா! நம்மள மாசத்துக்கு ஒருதடவையாவது அடிச்சாதான் அவனுக்கு தூக்கம் வரும்போலிருக்கே! காட்டி கொடுத்துறுவாளோன்னு பயந்து ஆத்தாக்கிட்டக் கூட சொல்லாம கொள்ளாம வந்தேனே! இதுக்காக காசுக் கொடுத்து அமெரிக்கா வந்துருக்கானே இந்த நாதாரி பயப்புள்ள!", கைப்பு அடிவயிறு லேசாய் கலங்கியது.
"கட்டதொரைக்கு கட்டஞ்சரியில்லைன்னு நெனக்கிறேன். எடுடா வண்டிய".
"பாஸ், இந்த ஆங்கிள்ள இருந்து பாத்தா, கேப்டன் விஜய்காந்த் மாதிரியே இருக்கீங்க பாஸ்", சைக்கிள் கேப்பில் கெடா வெட்டினான் மூக்கன்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அங்குலம் அங்குலமா பிரிக்கப் போறான். என்னடா ஆங்கிள் பாத்துட்டு இருக்குற ஆங்கிள்"
இறக்குமதி செஞ்ச கைப்புள்ளையோட ஆத்மார்த்த மூனு சக்கர வண்டிய மூனு பேரும் தள்ளிட்டு வர, கைப்புள்ள டைவ் அடிச்சி அதுல உட்கார முயல, அப்புறம்தான் தெரிஞ்சுது, பாண்டி வண்டியோட சீட்ட நைட்டு தூங்குறதுக்கு எடுத்து அத திரும்ப வண்டில மாட்டாம விட்டது. கைப்புள்ள டிக்கில பெரிய ப்ளாஸ்டர் போடுற அளவு காயம்.
"ஆஹா! இவனுங்க அக்கப் போரு தாங்க முடியலப்பா. இப்படி ஏதாவது ஏடாகூடமா செஞ்சே ஒடம்ப ரணகளமாக்கிட்டானுங்கப்பா"
கைப்பு அப்படியே வலிய தாங்கிக்கிட்டு ஒரு லுக்கு விட, மூவரும் வண்டிய தள்ளினார்கள்.
"டேய் டேய் டேய்! எங்கடா இந்த பக்கம் போறீங்க"
"கட்டதொர இந்த பக்கமாத்தான் வர்ரான் தல"
"இன்னுமா? இன்னைக்கு இது போதாதா? வண்டிய அந்த பக்கம் திருப்புங்கடா பொசக்கெட்டப் பசங்களா...", தப்பித்தோம் பிழைத்தோமென்று கைப்புள்ள பெருமூச்சு விட்டார்.
கைப்புள்ளையின் வண்டி ரோட்டில் வேகமாய் சென்றுக் கொண்டிருக்க, அதனை ஓர் போலிஸ் கார் வழிமறித்தது. "என்னடா இது, நம்மூரு பயபுள்ளைங்கதான் கார உள்ளவுட்டு, கைலாசத்துக்கு டிக்கெட் கொடுப்பாய்ங்க. இவனுங்களுமா?"
"தம்பி, இந்த கைப்புள்ள வண்டியோட பவர் தெரியாம உள்ள விழுந்து சாக பாத்த. அண்ணன் நல்ல மூடுல இருந்ததால தப்பிச்ச. சரி நீ யாரு?"
"ஐ எம் எ காப்"
"இங்க பாருய்யா? காப்பாம்ல காப்பு. காப்புன்னா கைல மாட்டிக்க. ஏன் ரோட்டுல வந்து விழுற", நையாண்டியாய் கைப்பு கலாய்க்க, வெவரந்தெரிஞ்ச ராசு, "பாஸ், காப்புன்னா போலிஸ்னு அர்த்தம்பாஸ்".
"போலிஸ்னா காக்கிச்ச்ட்டைல வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல!", எக்கோவாய் கூவினார் தல.
"மப்டில வந்திருக்காருன்னு நெனக்கிறேன் தல", ராசு தன்னோட இன்டெலிஜென்ட காட்டினார். இவனுங்க காமெடி தாங்க முடியாம போலிஸ் தன்னோட துப்பாக்கி பைல கைய வச்சார். இதை கவனித்த கைப்பு, "நான் ஒத்துக்கிறேன்! நீ காக்கிச்சட்டப் போடாதக் காப்புங்றத ஒத்துக்கிறேன்! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்".
தல இன்னைக்கி யார்கிட்டையும் அடிவாங்கலயேன்னு வயித்தெரிச்சல்ல இருந்த பாண்டி இதுதான் சாக்குன்னு, "என்னடா நீ காப்புன்னா பெரிய பருப்பா? எங்க தல இந்தியால எத்தன போலிஸ பந்தாடிருக்காறு தெரியுமா? எங்க பாஸ் கருணையோடு பாத்தா பில்டிங்குக்கு நடுவுல புறா பறக்கும்! கொடூரமா பாத்தா ஏரோப்ளேன் பறக்கும்!" என்று ஒரு பிட்ட போட, தல பீதியாகி "டேய்! அவனே சும்மா விட்டாக்கூட நீங்க மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே"
"சும்மா இருங்க தல. அவங்களுக்குத்தான் தமிழ் தெரியாதே தல"
"அப்படீனா, இன்னும் ரெண்டு மூனு பிட்ட சேத்துப் போடு. நம்மூர்ல எங்க நம்மல போட்டு மொத்திருவாய்ங்களோன்னு பயந்து பயந்தே பாதி உயிரு போயிரும்", என்று தல சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "நீதான் நாங்க தேடிட்டு இருக்குற அந்த தீவிரவாதியா?" என்று அந்த போலிஸ்காரர் தமிழில் சொல்ல, தலையைத் தவிர மத்தவர்கள் அப்ஸ்கான்ட்.

சாஃப்ட்வேர் எஞ்சினியராக கைப்புள்ள

சாஃப்ட்வேர் எஞ்சினியராக கைப்புள்ள


கைப்புள்ள எழுதிய code இல் bug இருப்பதாக testing engineer ஒருவர் வந்து சொல்கிறார்...

டெஸ்ட் : என்னது codeல bug இருக்கு?

கை : நாம நாலு code எழுதும்போது ஒரு நாப்பது bug வரத்தான் செய்யும்...bug இல்லாத code எந்த கம்பெனியில எழுதுறாங்க?? ம்ஹும்...நல்லா கேட்க வந்துட்டான்யா டீட்டேயிலு...

டெஸ்ட் : சரி எப்ப bug எல்லாம் fix பண்ணப்போற?
கை : தம்பி testing team பக்கம் போய் கேட்டுப்பாருங்க நம்மளப் பத்தி...இதுவரைக்கும் எத்தன buggoda code எழுதிக் கொடுத்திருப்போம்....ஒன்னாவது fix பண்ணியிருப்பேனா?? ச்சும்மா சத்தமில்லாம support team க்கு assign பண்ணிட்டு போயிக்கே இருப்போம்ல!!!டெஸ்ட் : சரி அப்ப நானே fix பண்ணிக்கிறேன்..
கை : தம்பி இது சாதாரண கம்பெனி இல்ல..ஒரு டொச்சுக் கம்பெனி..இங்க code எழுதினா output வராது வெறும் error தான் வரும்...இது bug gu பூமி....(அந்தப் பக்கமாக ஒரு சீனியர் டெஸ்டிங் எஞ்சினியர் போகிறார்...அவரைப் பார்த்து நம்ம கைப்புள்ள...)
கை : அண்ணே, எதோ bug இருக்கு fix பண்ணனும்னு சொன்னீங்க அனுப்பவே இல்ல???




Tuesday, July 29, 2008

Great Rescue Operation

Great Rescue Operation
Green color = Raja : Blue color= Govindaraj ; white color = Kalai





Sunday, July 27, 2008

பார்த்தேன் ரசித்தேன்



பார்த்தேன் ரசித்தேன்

பசுமையானவளை

அவளுக்கு வியர்த்திருந்தது

வெண்பனியோ என்று

நினைத்துக் கொண்டேன்

நான் தொட்டவுடன்

தொட்டாற் சுருங்கி


அன்புடன் -- Govindaராஜ்

கள்ளி

என் இதயத்தைத் திருடிவிட்டு
என்னை மறந்த அந்தக் கள்ளியை
நினைத்து நினைத்து என் வேதனையைக்
கள்ளிச் செடியில் கவிதையாக எழுதினேன்கள்ளியும்
கண்ணீர் விட்டது என்னுடன் சேர்ந்து


கண்களை கவரும் மலரை பார்
அதை ரசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடு
பரிக்க நினைக்காதே

முற்றுப்புள்ளி.....



கால் புள்ளியாகவும்,
அரை புள்ளியாகவும்வளர்ந்த
நம் உறவுக்குகடைசியாக
ைக்கப்பட்டதுமுற்றுப்புள்ளி ...
"உன் திருமணம்"

என் நல்ல மனது



முன்பின் தெரியாத நபர்
கை நீட்டீய உடன்
வண்டியில் அவரை
ஏற்றிக்கொண்டேன்;

ஐந்து நிமிடம்
நீடித்த நட்பு
அவர் இறங்கும் இடம்
வந்ததும் முற்றுப்பெற்றது;

அவர் கொடுத்த "நன்றி" யை
புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டு
புறப்பட்டேன்;

சிறிது தூரம் சென்றதும்
என்னுடைய மணிப்பர்ஸை
தொட்டுப் பார்த்துக்கொண்டது

"என் நல்ல மனது

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்



பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்,
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்,
ஏட்டுல எழுதவில்ல,
எழுதிவெச்சுப் பழக்கமில்ல,
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல,
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல,
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல,
என்னவோ ராகம், என்னன்னவோ தாளம், தலைய ஆட்டும்,
புரியாத கூட்டம் எல்லாமே சங்கீதந்தான்
...ஆஆஆ...
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதிதான் சட்ஜமமென்பதும் தைவதமென்பதும்
பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்.
கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி,
சேரிக்கும் சேரவேணும்,
அதுக்கொரு பாட்டப் படி,
என்னயே பாரு எத்தன பேரு,
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ... சொன்னது தப்பா தப்பா,
ராகத்தில் புதுசு என்னுதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா..........................

How is it ?? -By Govindaraj.k

Saturday, July 26, 2008

தாசாவதார... உண்மை முகம்

நான் படத்தில் உள்ள முதல் 10 நிமிட காட்சியில் வருவதை சொல்லி விடுகிறேன்...முதலில் 12 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சைவ கோயிலில் ஒண்டு குடுத்தனம் நடத்திய நாமம் போட்ட சாமியை... விரட்ட... வேலை செய்யும்... இரண்டாம் குலோத்துங்கனுக்கு... சைவ மதம் பிடித்து விட்டதாக வசனம் பேசுவார்...பின்னர் நாமம் போட்ட சாமியை... வேலைகாரர்கள் பெயர்ப்பதாக காட்டி... அதனை... இந்த நாமம் போட்ட நம்பி தடுப்பதாகவும்... காட்டுவார்... அப்போது இந்த நாமம் போட்ட நம்பி... 10 பேரை அடிப்பார்... சிலரை கொல்வதாகவும் காட்டுவார்... பின்னர் இந்த நம்பி தன்னை பற்றி சுயபுராணம் பேசி... அரசனுக்கு பிரம்மகத்தி தோசம் பிடிக்க போவதாக சவால் வேறு...சோழன் நம்பியை... ஓம் நமச்சிவாய... என சொல்ல சொல்லும் போது... நம்பியின் மனைவி அந்த சைவ சொல்லை என சொல்லுங்கள் என நம்பியிடம் கெஞ்சி கேட்ட போகும் போது... ஓம் எனும் அடுத்த சொல்லான நமச்சிவாய எனும் சொல்லை சொல்லவிடாமல் நாமம் போட்டவர்கள் தடுக்கும் வைணவ மத வெறியையும்... நம்பி... ஓம்.... ..... ........ எனும் நாமகாரர்களின் சொல்லை சொல்லும் மதவெறியையும்... யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்... ஆனால்...பின்னர் நாமம் போட்ட நம்பியை... சோழன் கொடூர தண்டனை கொடுப்பதாக காட்டுகிறார்... அப்போது நாம நம்பியை கழுகு வந்து வாழ்த்துவதாகவும்... அதனை சைவர்கள் வில்லால் தாக்கும் அது கோயில் கோபுரம் பக்கம் போவதகவும் காட்டுகிறார்... ஆனால் நம்பியை... கல்லோடு கட்டி... மிக கொடூரமாக... நம்பியின் மகனை கொண்டு... இறுதி சடங்கெல்லாம் செய்து... கடலில் போடுவதாக காட்டி... நம்பியின் மனைவி தாலியை... சோழன் மீது வீசுவதாக முடிகிறது...பாட்டின் இடையே... சைவர்கள் வணங்கும் கடவுள் சிவனின் வடிவான லிங்கத்தை... கல் என்கிறார்... (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது) கூடவே... சிவனின் நெற்றி கண்ணை... பூனை கண் என கிண்டல்... (பூனை கண்ணால் பார்த்தால் எதுவும் குற்றம்தான்)... சோழன் மன்னனை விட நம்பி உயர்ந்தவன்... (ராஜனுக்கு ராஜன்... இந்த ரங்கராஜன் தான்)... தில்லை... தொல்லை... சீனிவாசனுக்கும்... ராஜலட்சுமிக்கும் (கமலின் உண்மையான தந்தை... தாய் பெயர்கள்... சீனிவாசன்... ராஜலட்சுமி) பிறந்த நம்பி உயர்வானவன் என்றெல்லாம் சுய விளம்பரம் வேறு...இப்படி 12 ஆம் நூற்றாண்டு காட்சிகளை பார்ப்பவர்களுக்கு... இரண்டாம் குலோத்துங்கன்... மதவெறியனாகவும்... சைவ சமயத்தினர் கொடூரமானவர்களாகவும்... நாமம் போட்டவர்கள் நல்லவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது...ஆனால் உண்மை நிலைக்கு வருவோம்...இப்போதும் கூட... தில்லையில் நாமம் போட்ட சாமி ஒண்டு குடுத்தனம் இல்லை... தனியாக ஒரு பகுதியை ஆக்கிமித்து கொண்டுள்ளார்... சில மாதங்களுக்கு தில்லை சைவ கோயிலை கூட இந்த நாமம் போட்ட சாமிக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுக்க வேண்டும் என நாமகாரர்கள் பிரச்சனை செய்து கொண்டுள்ளனர்... படத்தில் காட்டபட்டது ஒன்றும் நடக்கவில்லை...பல நூற்றாண்டுகளாக தில்லை... தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கட்டுப்பாட்டில்தான் உள்ளது... ராஜராஜன் காலத்தில் தீட்சிதர்கள்... மறைத்து வைத்திருந்த சைவ திருமுறைகள் மீட்கப்பட்டன... காடவர்கோன் காலத்தில்... தீட்சிதர்கள் சில காலம் தில்லையில் இருந்து விரட்டப்பட்டனர்... மற்றபடி எல்லா காலங்களிலும் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்டம்தான்... இரண்டாம் குலோத்துங்கன் வந்தான் என்பது எல்லாம்... கமலின் பொய்... புரட்டு....சைவ கோயில்களின் நாயன்மார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு.... 1. திருஆரூர்... 2. தில்லை (கோயில்)... மாணிக்கவாசகர்... தில்லையை கோயில் என்றுதான் திருவாசகம் பாடியுள்ளார்...அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு... 1. திருவரங்கம்... 2.திருமலை (திருப்பதி)...சாதாரண என்னை போன்ற ஒரு முட்டாளின் கேள்வி என்னவென்றால்... இங்கே தில்லையில் நாம்ம போட்ட சாமிக்காக அழுவோர்... திருவரங்கத்திலோ... திருமலையிலோ... வேறு எந்த நாமம் போட்ட கோயில்களிலாவது ஏதாவது பட்டை(சைவ) போட்ட சாமிக்கு ஒரு அங்குலம் இடம் உண்டா என சொல்ல முடியுமா?இந்த நியாயப்படி பார்த்தால்... படத்தில் காட்டுவது... தில்லையில் நாமம் போட்ட சாமியை பெயர்த்து எறிவது நியாயமே...உண்மையில் வைணவம் என்பது... தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதானே? அது வந்தேறிகளின் மதம்தானே?இப்படி வந்தேறி (வைணவ) மதத்தை கமல் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது ஆரிய பாசம்தானே?இன்னொரு செய்தியும் நாம் அறிந்து கொள்வோம்...இந்த படத்தில் சைவ சமய வெறியனாக காட்டப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் கம்ப இராமயணம்... திருவரங்கம் கோயிலில் அரகேற்றப்பட்டது...குலோத்துங்க சோழர்கள் காலத்தில்தான் சோழ நாட்டில் வைணவம் வளர்ந்ததாக சொல்லலாம்...மேலும்... திருகாரகோணத்தில் (நாகப்பட்டினம்) இருந்த ஜைன மடாலத்தையை சூறையாடி கட்டியதுதான்... நாமகாரர்களின் திருவரங்கம் கோயில்...இப்படி எல்லா அயோக்கியதனங்களையும் செய்த... நாமகாரர்களுக்கு... இப்போது கமல் பல்லக்கு தூக்குவது... என்ன பாசம் என தெரியவில்லை...வயது... ஆக... ஆக... தானாக வளரும்... ஜாதி வெறி... இப்போது வளர்வது இதுதான்... கர்நாடகத்தை எதிர்த்து... நடத்தப்பட்ட உண்ணா விரத்தில்... எனக்கும் கும்ளேவும் வேண்டியவர்... வைரமுத்துவும் வேண்டியவர்... என போராட்டம் நீர்த்து போக விரும்பிய நபர் கமல்...இடையில் கமல்... பகுத்தறிவு பேசி... நம்மை குழப்பி வருகிறார்...பூனை... கொஞ்சம்... கொஞ்சம் வெளி வந்து கொண்டுள்ளது... விரைவில் சாயம் வெளுத்து விடும்...

Friday, July 11, 2008

'காதல்' பொம்மை

தெருவில் வருகின்ற
சவ்வு மிட்டாய்காரனிடம் கூட ...
'காதல்' பொம்மை
செய்யச்சொல்லி ...
அடம்பிடிக்கிறது
உன் மீதான காதல்!

Thursday, July 10, 2008

புஷ்


"நகருங்க... நான் குழி தோண்டறேன்... நான்தான் அதில் எக்ஸ்பர்ட்...."

Tuesday, July 1, 2008

குசேலன் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!


தசாவதாரம் படத்தின் பரபரப்பு அடங்குதற்குள் தமிழ் ரசிகர்களை குசேலன் பரபரப்பு தொற்றிக் கொண்டது.ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என்றாலே அந்த படத்துக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதிலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? பரபரப்பு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.சரி.. விஷயத்துக்கு வருவோம். குசேலன் படத்தை பற்றிய இதுவரை வெளிவந்த ‌மற்றும் வெளிவராத தகவல்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பது போலவே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குசேலன் படத்தைப் பற்றி ஏதாவது புதிய தகவல் கிடைக்காதா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறோம்.*


கடந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம்தான் தமிழில் குசேலன் என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கிறது.* மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்தவர் மம்முட்டி. அ‌தே கேரக்டரில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.* இந்த படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு குசேலனுக்கு முதலில் குசேலடு என்று பெயரிட்டனர். அந்த பெயரை இப்போது கதாநாயகடு என்று மாற்றியுள்ளனர்.* இந்த படத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிக்கிறார் என்பது தெரிந்த சங்கதிதான். நயன்தாராவும் இந்த படத்தில் ஒரு நடிகையாகவே நடித்துள்ளார் என்பது புது தகவல்.* படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் பசுபதி நடிக்கிறார்.‌ வெயி்ல் படத்தில் பசுபதியின் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்தான் குசேலனில் பசுபதி நடிக்க சிபாரிசு செய்தார்.* ரஜினிகாந்தின் கிராமத்து தோழராக நடித்துள்ள பசுபதியின் மனைவியாக நடிகை மீனா நடித்திருக்கிறார். மலையாளத்திலும் மீனா இதே கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.* சந்திரமுகி படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று டைரக்டர் பி.வாசு விரும்பியதன் விளைவுதான் குசேலன் உருவாக ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுதவிர ரஜினியின் குரு டைரக்டர் பாலசந்தரும் விரும்பி கேட்டுக் கொண்டதும் குசேலன் உருவாக காரணமாகும்.* குசேலன் டைரக்டர் பி.வாசு இயக்கும் 55வது படம். * குசேலன் சூட்டிங் இதுவரை மொத்தம் 82 நாட்கள் நடந்துள்ளன. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில் ஒரே‌யொரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி. அந்த பாடலும் விரைவில் படமாக்கப்படவுள்ளது.* தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற உலக நாயகனே பாடலைப்போலவே குசேலனில் இடம்பெறும் சினிமா... சினிமா... சினிமாதான்... எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் வந்ததிந்த சினிமாதான்...! என்ற பாடல் பட்டையை கிளப்பும் என்கிறார் டைரக்டர் பி.வாசு.* இந்த பாடலை சூப்பர் ஸ்டாருக்காகவே ஸ்பெஷலாக எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.* இந்த பாடலில் ரஜினிகாந்துடன், நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், நடிகைகள் த்ரிஷா, மம்தா உள்ளிட்டோரும் பங்குபெறவுள்ளனர். மொத்தம் 30 நடிகர் -நடிகைகள் இந்த பாடலில் தோன்ற உள்ளனர்.* இந்த பாடல் 75 ஆண்டு தமிழ்சினிமா வரலாற்றை திரும்பிப் பார்க்கும் வகையில் உருவாக்கப்படவிருக்கிறதாம்.* குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கியுள்ளது.* படத்தில் சூப்பர் ஸ்டார் சிவாஜி படத்தை விட இளமையாக தோன்றுகிறார். குசேலன் படத்தின் ஸ்டில்களே அதற்கு சாட்சி.* குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பசுபதி, நயன்தாரா, மீனா, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, பாத்திமா பாபு, தியாகு, கீதா, சோனா, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் பி.வாசுவும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.* நடிகர் திலகம் பிரபு, விஜயகுமார், மதன்பாப், நிழல்கள் ரவி, சினேகா, குஷ்பு, த்ரிஷா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். அதாவது கால்ஷீட் கேட்பது, சூட்டிங்கில் பங்கேற்பது போன்ற காட்சிகளில் இவர்கள் தோன்றுகிறார்கள்.* குசேலன் படத்தின் ஆடியோ வருகிற 30ம் தேதி வெளியிடப்படுகிறது.* ஜுலை மாத இறுதியில் குசேலன் படம் ரீலிஸ் ஆகும் என்று டைரக்டர் பி.வாசு அறிவித்துள்ளார். ரீலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது

இந்தக் குளத்தில் காதல் எறிந்தவர்கள்

என்னைச்சுற்றி நடந்த காதல் நிகழ்வுகளையும் - எழுதிய, எழுதிக் கொடுத்த - வாங்கிய, வாங்க மறுத்த காதல் கவிதைகளையும் , பரிமாறிக்கொள்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் நிஜங்கள் சுடும்

"எதுவுமில்லாமல் இருக்ககூடாது என்பதற்காக ஏதாவது சொல்கிறேன். ஆனால் சொல்வதற்கு எதுவுமில்லை"

குருவி - மனதை பாதித்தது










விஜய்யும் த்ரிஷாவும் சின்ன வயசுல ஒரு குருவியை வளர்ப்பாங்களாம்;. அந்தக்குருவியின் முதுகில் ஒரு மச்சம் இருக்குமாம். இரண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்து வீடு. அந்தக் குருவி இரண்டு பேரின் அன்பையும் பெற்றிருக்கும். அந்தக் குருவியைப் பார்;த்து இரண்டுபேரும் ஒரு பாட்டு கூட பாடுவாங்களாம்.பின் விஜய் குடும்பமும் த்ரிஷா குடும்பமும் தனித்தனியே பிரிந்து போய்விட. அந்தக் குருவி மட்டும் அநாதையாய் அந்த இடத்தில் இருக்குமாம்.16 வருடங்களுக்குப் பிறகு பட்டணத்தில் விஜய் மீது ஒரு காகம் எச்சில் போட முயன்றபொழுது, எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று காகத்தின் அந்த எச்சத்தை தன் மீது தாங்கிக் கொள்ள,விஜய்க்கு அதனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்திடுமாம். அந்தக்குருவியை கையில் எடுத்து எச்சிலை துடைக்கும்பொழுது கவனிப்பாராம். அது சின்ன வயதில் தான் வளர்த்த குருவியேதான்பின் ஒரு பாடல் பாடுவாராம்.

இன்னிசைப் பாடிவரும்
இந்தக்குருவிக்கு குஷ்டமில்லை
குருவிகள் இல்லையென்றால்
எந்த அருவிக்கும் நஷ்டமில்லை

என்று சுவிட்சர்லாந்து மலை உச்சியில் நின்று பாடல் பாட அந்தப்பாடல் தான் சின்ன வயதில் கேட்ட பாடல் அல்லவா என்று சென்னை அண்ணாசாலையில் சந்து முனையிலிருந்து , த்ரிஷா சுவிட்சர்லாந்துக்கு ஓடி வந்து விஜய்யுடன் சேர்ந்து பாட்டு பாடி இறுதியாக பாபநாசம் அணையில் வந்து தங்களது நட்பை காதலாக புதுப்பித்துக் கொள்வார்களாம்.இதன் பிறகு தான் கதையில் திருப்புமுனையே. ஆம் தான் விஜய் மீது எச்சம் போடுவதை தடுத்த குருவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த காகம் குருவியை பழிவாங்க அலையுமாம். தங்களை சேர்த்து வைத்த குருவியை காகத்திடமிருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று விஜய்யும் த்ரிஷாவும் துப்பாக்கியோடு திரிவது கதையில் சிறப்பம்சம்.

அறை எண் 305ல் வயிற்றெரிச்சல்

அன்புள்ள சிம்புதேவனுக்கு ,

தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி. உங்களின் தனித்திறமையை முழுமையாக பாராட்ட முடியாத நிலையில் இருக்க காரணம் எல்லாரும் விழுகின்ற குட்டையில் நீங்களும் விழுந்து சகதிகளை அப்பிக்கொண்டதுதான்.பொருளாதார ஏற்ற இறக்கமா , இல்லை கலாச்சார சீரழிவா, இல்லை பக்கத்து தெரு குழாயில் தண்ணீர் வரவில்லையா? உடனே சாப்ட்வேர் இஞ்சினியர்கள்தான் காரணம் என்று கொடிபிடிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள்.அது என்னப்பா ? உங்கள் வீட்டு கழிவறை சுத்தமில்லையென்றால் கூட சாப்ட்வேர் இஞ்சினியர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகின்றீர்கள்?அந்தப்படத்தில் ஒரு காட்சி சாப்ட்வேர் இஞ்சினியர்களை பெரிதும் வேதனைப்படுத்தியிருக்கின்றது. இரண்டு படம் எடுத்துள்ளீர்கள் என்கிற பெருமை அந்த ஒரு காட்சியில் தரைமட்டமாக்கிவிட்டீர்கள்."ஜாவா என்கிற கணிப்பொறி மொழி அறிந்த ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், குறைந்த காலகட்டத்திற்குள் பைக், கார், ஹெலிகாப்டர் வாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதான காட்டியுள்ளீர்கள். இப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளின் தாக்கங்களை அதிகபட்டசமாக காட்டியுள்ளீர்கள்தான் எனினும் அப்படிபட்டவர்களை பழிவாங்குவதற்காக, கடவுளாக இருப்பவர்கள் அவர்களின் கைகளை சூம்பிப்போவ வைப்பதாக காட்டியுள்ள உங்களின் மட்டமான ரசனையை என்னவென்று சொல்வது? "ஆடைகள் குறைய குறைய கொட்டிக் கொடுக்கும், பெண்களின் மறைக்கப்படவேண்டிய உறுப்புகளின் மீது, பம்பரமும், ஆம்லெட்டும், போட்டு சாப்பிடுகின்ற சினிமாத்துறையினரை விடவா சாப்ட்வேர் இஞ்சினியர்கள் அதிகமாக சம்பாதிக்கின்றார்கள்?சரி அப்படிப்பட்ட சம்பாத்தியத்தின் பிண்ணணியை ஆராய்ந்து பார்த்ததுண்டா?அவர்களை வெட்டியாக உட்கார வைத்தா சம்பளம் கொடுக்கின்றார்கள். அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை,விபச்சாரம் செய்து பிழைக்கவில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவில்லை, லஞ்சம் வாங்கவில்லை. திறமைக்கு கிடைக்கின்ற ஊதியத்தில் ஒழுங்காக வருமானவரி கட்டுகிறவர்கள். அவர்களைப் பற்றியா இப்படி மட்டகரமான கற்பனையில் காட்சி எடுத்துள்ளீர்கள். அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?மற்ற துறைகளைப் போல அல்ல இது. இந்தப் பணியில் இருந்து எப்பொழுது தூக்கிவீசப்படுவார்கள் என்கிற உத்திரவாதம் இல்லை.ஒரு ப்ராஜக்ட் ஆரம்பித்துவிட்டால் அதற்கு டெட் லைன்(Dead Line), உயிரோடு இருக்கும் லைன் என்று குறிப்பிட்ட காலகட்டத்தை நிர்ணயித்து அதற்குள் முடித்துவிடவேண்டிய கட்டாயத்திற்குள் பரபரப்பான சூழ்நிலையில் பணிபுரிபவர்கள்.சிலநேரங்களில் இரவு பகல் பார்க்காமல் விழித்திருந்து அரைத்தூக்கம் தூங்கி, இப்படி உடல் வருத்தி பார்க்கின்ற வேலைக்காகத்தான் அவர்களுக்கு சம்பளமேயன்றி, உங்கள் துறையினர் பலரைப் போல பெண்களை அறைகுறையாக காட்டியோ, பாலுணர்வுகளைத்தூண்டியோ சம்பாதிக்கவில்லைஉங்கள் துறையில் சம்பாதிப்பவர்களை மிஞ்சிவிடக்கூடாதே என்கிற வயிற்றெரிச்சலிலா ?அப்படிப்பட்ட காட்சியை நீங்கள் எடுத்துள்ளீர்கள்? யதார்த்தங்களை படமாக்குவதற்கு முன் அவர்கள் வாழுகின்ற சூழலுக்குள் சென்று அவர்களின் உண்மையான நிலையினை உணர்ந்து கொள்ளுங்கள்.சாப்ட்வேர் இஞ்சினியர்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள் என்கிற கூப்பாடுகள் வெளிப்படுகின்றதே தவிர அவர்கள் அந்தச் சூழலில் படுகின்ற அவதிகளையும் படம் எடுத்தீர்கள் என்றால் பாராட்டலாம்.அவர்களின் கைகள் சூம்பிப் போகுமாறு நீங்கள் காட்டியுள்ள காட்சியில் உங்கள் கற்பனை ரொம்பவே சூம்பிப்போயிருப்பது தெரிகின்றது சிம்புதேவா!ஒரே ஒரு வேண்டுகோள், அறை எண் 305ல் கடவுள் படத்தின் தலைப்பை அறை எண் 305ல் வயிற்றெரிச்சல் என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். வருத்தங்களோடு ஒரு வாழ்த்துக்கள்

இப்படிக்கு வேதனையுடன்,
ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர்

Wednesday, April 30, 2008