Tuesday, July 1, 2008
குருவி - மனதை பாதித்தது
விஜய்யும் த்ரிஷாவும் சின்ன வயசுல ஒரு குருவியை வளர்ப்பாங்களாம்;. அந்தக்குருவியின் முதுகில் ஒரு மச்சம் இருக்குமாம். இரண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்து வீடு. அந்தக் குருவி இரண்டு பேரின் அன்பையும் பெற்றிருக்கும். அந்தக் குருவியைப் பார்;த்து இரண்டுபேரும் ஒரு பாட்டு கூட பாடுவாங்களாம்.பின் விஜய் குடும்பமும் த்ரிஷா குடும்பமும் தனித்தனியே பிரிந்து போய்விட. அந்தக் குருவி மட்டும் அநாதையாய் அந்த இடத்தில் இருக்குமாம்.16 வருடங்களுக்குப் பிறகு பட்டணத்தில் விஜய் மீது ஒரு காகம் எச்சில் போட முயன்றபொழுது, எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று காகத்தின் அந்த எச்சத்தை தன் மீது தாங்கிக் கொள்ள,விஜய்க்கு அதனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்திடுமாம். அந்தக்குருவியை கையில் எடுத்து எச்சிலை துடைக்கும்பொழுது கவனிப்பாராம். அது சின்ன வயதில் தான் வளர்த்த குருவியேதான்பின் ஒரு பாடல் பாடுவாராம்.
இன்னிசைப் பாடிவரும்
இந்தக்குருவிக்கு குஷ்டமில்லை
குருவிகள் இல்லையென்றால்
எந்த அருவிக்கும் நஷ்டமில்லை
என்று சுவிட்சர்லாந்து மலை உச்சியில் நின்று பாடல் பாட அந்தப்பாடல் தான் சின்ன வயதில் கேட்ட பாடல் அல்லவா என்று சென்னை அண்ணாசாலையில் சந்து முனையிலிருந்து , த்ரிஷா சுவிட்சர்லாந்துக்கு ஓடி வந்து விஜய்யுடன் சேர்ந்து பாட்டு பாடி இறுதியாக பாபநாசம் அணையில் வந்து தங்களது நட்பை காதலாக புதுப்பித்துக் கொள்வார்களாம்.இதன் பிறகு தான் கதையில் திருப்புமுனையே. ஆம் தான் விஜய் மீது எச்சம் போடுவதை தடுத்த குருவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த காகம் குருவியை பழிவாங்க அலையுமாம். தங்களை சேர்த்து வைத்த குருவியை காகத்திடமிருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று விஜய்யும் த்ரிஷாவும் துப்பாக்கியோடு திரிவது கதையில் சிறப்பம்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment