Tuesday, July 29, 2008

Great Rescue Operation

Great Rescue Operation
Green color = Raja : Blue color= Govindaraj ; white color = Kalai





Sunday, July 27, 2008

பார்த்தேன் ரசித்தேன்



பார்த்தேன் ரசித்தேன்

பசுமையானவளை

அவளுக்கு வியர்த்திருந்தது

வெண்பனியோ என்று

நினைத்துக் கொண்டேன்

நான் தொட்டவுடன்

தொட்டாற் சுருங்கி


அன்புடன் -- Govindaராஜ்

கள்ளி

என் இதயத்தைத் திருடிவிட்டு
என்னை மறந்த அந்தக் கள்ளியை
நினைத்து நினைத்து என் வேதனையைக்
கள்ளிச் செடியில் கவிதையாக எழுதினேன்கள்ளியும்
கண்ணீர் விட்டது என்னுடன் சேர்ந்து


கண்களை கவரும் மலரை பார்
அதை ரசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடு
பரிக்க நினைக்காதே

முற்றுப்புள்ளி.....



கால் புள்ளியாகவும்,
அரை புள்ளியாகவும்வளர்ந்த
நம் உறவுக்குகடைசியாக
ைக்கப்பட்டதுமுற்றுப்புள்ளி ...
"உன் திருமணம்"

என் நல்ல மனது



முன்பின் தெரியாத நபர்
கை நீட்டீய உடன்
வண்டியில் அவரை
ஏற்றிக்கொண்டேன்;

ஐந்து நிமிடம்
நீடித்த நட்பு
அவர் இறங்கும் இடம்
வந்ததும் முற்றுப்பெற்றது;

அவர் கொடுத்த "நன்றி" யை
புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டு
புறப்பட்டேன்;

சிறிது தூரம் சென்றதும்
என்னுடைய மணிப்பர்ஸை
தொட்டுப் பார்த்துக்கொண்டது

"என் நல்ல மனது

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்



பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்,
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்,
ஏட்டுல எழுதவில்ல,
எழுதிவெச்சுப் பழக்கமில்ல,
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல,
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல,
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல,
என்னவோ ராகம், என்னன்னவோ தாளம், தலைய ஆட்டும்,
புரியாத கூட்டம் எல்லாமே சங்கீதந்தான்
...ஆஆஆ...
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதிதான் சட்ஜமமென்பதும் தைவதமென்பதும்
பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்.
கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி,
சேரிக்கும் சேரவேணும்,
அதுக்கொரு பாட்டப் படி,
என்னயே பாரு எத்தன பேரு,
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ... சொன்னது தப்பா தப்பா,
ராகத்தில் புதுசு என்னுதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா..........................

How is it ?? -By Govindaraj.k

Saturday, July 26, 2008

தாசாவதார... உண்மை முகம்

நான் படத்தில் உள்ள முதல் 10 நிமிட காட்சியில் வருவதை சொல்லி விடுகிறேன்...முதலில் 12 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சைவ கோயிலில் ஒண்டு குடுத்தனம் நடத்திய நாமம் போட்ட சாமியை... விரட்ட... வேலை செய்யும்... இரண்டாம் குலோத்துங்கனுக்கு... சைவ மதம் பிடித்து விட்டதாக வசனம் பேசுவார்...பின்னர் நாமம் போட்ட சாமியை... வேலைகாரர்கள் பெயர்ப்பதாக காட்டி... அதனை... இந்த நாமம் போட்ட நம்பி தடுப்பதாகவும்... காட்டுவார்... அப்போது இந்த நாமம் போட்ட நம்பி... 10 பேரை அடிப்பார்... சிலரை கொல்வதாகவும் காட்டுவார்... பின்னர் இந்த நம்பி தன்னை பற்றி சுயபுராணம் பேசி... அரசனுக்கு பிரம்மகத்தி தோசம் பிடிக்க போவதாக சவால் வேறு...சோழன் நம்பியை... ஓம் நமச்சிவாய... என சொல்ல சொல்லும் போது... நம்பியின் மனைவி அந்த சைவ சொல்லை என சொல்லுங்கள் என நம்பியிடம் கெஞ்சி கேட்ட போகும் போது... ஓம் எனும் அடுத்த சொல்லான நமச்சிவாய எனும் சொல்லை சொல்லவிடாமல் நாமம் போட்டவர்கள் தடுக்கும் வைணவ மத வெறியையும்... நம்பி... ஓம்.... ..... ........ எனும் நாமகாரர்களின் சொல்லை சொல்லும் மதவெறியையும்... யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்... ஆனால்...பின்னர் நாமம் போட்ட நம்பியை... சோழன் கொடூர தண்டனை கொடுப்பதாக காட்டுகிறார்... அப்போது நாம நம்பியை கழுகு வந்து வாழ்த்துவதாகவும்... அதனை சைவர்கள் வில்லால் தாக்கும் அது கோயில் கோபுரம் பக்கம் போவதகவும் காட்டுகிறார்... ஆனால் நம்பியை... கல்லோடு கட்டி... மிக கொடூரமாக... நம்பியின் மகனை கொண்டு... இறுதி சடங்கெல்லாம் செய்து... கடலில் போடுவதாக காட்டி... நம்பியின் மனைவி தாலியை... சோழன் மீது வீசுவதாக முடிகிறது...பாட்டின் இடையே... சைவர்கள் வணங்கும் கடவுள் சிவனின் வடிவான லிங்கத்தை... கல் என்கிறார்... (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது) கூடவே... சிவனின் நெற்றி கண்ணை... பூனை கண் என கிண்டல்... (பூனை கண்ணால் பார்த்தால் எதுவும் குற்றம்தான்)... சோழன் மன்னனை விட நம்பி உயர்ந்தவன்... (ராஜனுக்கு ராஜன்... இந்த ரங்கராஜன் தான்)... தில்லை... தொல்லை... சீனிவாசனுக்கும்... ராஜலட்சுமிக்கும் (கமலின் உண்மையான தந்தை... தாய் பெயர்கள்... சீனிவாசன்... ராஜலட்சுமி) பிறந்த நம்பி உயர்வானவன் என்றெல்லாம் சுய விளம்பரம் வேறு...இப்படி 12 ஆம் நூற்றாண்டு காட்சிகளை பார்ப்பவர்களுக்கு... இரண்டாம் குலோத்துங்கன்... மதவெறியனாகவும்... சைவ சமயத்தினர் கொடூரமானவர்களாகவும்... நாமம் போட்டவர்கள் நல்லவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது...ஆனால் உண்மை நிலைக்கு வருவோம்...இப்போதும் கூட... தில்லையில் நாமம் போட்ட சாமி ஒண்டு குடுத்தனம் இல்லை... தனியாக ஒரு பகுதியை ஆக்கிமித்து கொண்டுள்ளார்... சில மாதங்களுக்கு தில்லை சைவ கோயிலை கூட இந்த நாமம் போட்ட சாமிக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுக்க வேண்டும் என நாமகாரர்கள் பிரச்சனை செய்து கொண்டுள்ளனர்... படத்தில் காட்டபட்டது ஒன்றும் நடக்கவில்லை...பல நூற்றாண்டுகளாக தில்லை... தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கட்டுப்பாட்டில்தான் உள்ளது... ராஜராஜன் காலத்தில் தீட்சிதர்கள்... மறைத்து வைத்திருந்த சைவ திருமுறைகள் மீட்கப்பட்டன... காடவர்கோன் காலத்தில்... தீட்சிதர்கள் சில காலம் தில்லையில் இருந்து விரட்டப்பட்டனர்... மற்றபடி எல்லா காலங்களிலும் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்டம்தான்... இரண்டாம் குலோத்துங்கன் வந்தான் என்பது எல்லாம்... கமலின் பொய்... புரட்டு....சைவ கோயில்களின் நாயன்மார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு.... 1. திருஆரூர்... 2. தில்லை (கோயில்)... மாணிக்கவாசகர்... தில்லையை கோயில் என்றுதான் திருவாசகம் பாடியுள்ளார்...அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு... 1. திருவரங்கம்... 2.திருமலை (திருப்பதி)...சாதாரண என்னை போன்ற ஒரு முட்டாளின் கேள்வி என்னவென்றால்... இங்கே தில்லையில் நாம்ம போட்ட சாமிக்காக அழுவோர்... திருவரங்கத்திலோ... திருமலையிலோ... வேறு எந்த நாமம் போட்ட கோயில்களிலாவது ஏதாவது பட்டை(சைவ) போட்ட சாமிக்கு ஒரு அங்குலம் இடம் உண்டா என சொல்ல முடியுமா?இந்த நியாயப்படி பார்த்தால்... படத்தில் காட்டுவது... தில்லையில் நாமம் போட்ட சாமியை பெயர்த்து எறிவது நியாயமே...உண்மையில் வைணவம் என்பது... தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதானே? அது வந்தேறிகளின் மதம்தானே?இப்படி வந்தேறி (வைணவ) மதத்தை கமல் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது ஆரிய பாசம்தானே?இன்னொரு செய்தியும் நாம் அறிந்து கொள்வோம்...இந்த படத்தில் சைவ சமய வெறியனாக காட்டப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் கம்ப இராமயணம்... திருவரங்கம் கோயிலில் அரகேற்றப்பட்டது...குலோத்துங்க சோழர்கள் காலத்தில்தான் சோழ நாட்டில் வைணவம் வளர்ந்ததாக சொல்லலாம்...மேலும்... திருகாரகோணத்தில் (நாகப்பட்டினம்) இருந்த ஜைன மடாலத்தையை சூறையாடி கட்டியதுதான்... நாமகாரர்களின் திருவரங்கம் கோயில்...இப்படி எல்லா அயோக்கியதனங்களையும் செய்த... நாமகாரர்களுக்கு... இப்போது கமல் பல்லக்கு தூக்குவது... என்ன பாசம் என தெரியவில்லை...வயது... ஆக... ஆக... தானாக வளரும்... ஜாதி வெறி... இப்போது வளர்வது இதுதான்... கர்நாடகத்தை எதிர்த்து... நடத்தப்பட்ட உண்ணா விரத்தில்... எனக்கும் கும்ளேவும் வேண்டியவர்... வைரமுத்துவும் வேண்டியவர்... என போராட்டம் நீர்த்து போக விரும்பிய நபர் கமல்...இடையில் கமல்... பகுத்தறிவு பேசி... நம்மை குழப்பி வருகிறார்...பூனை... கொஞ்சம்... கொஞ்சம் வெளி வந்து கொண்டுள்ளது... விரைவில் சாயம் வெளுத்து விடும்...

Friday, July 11, 2008

'காதல்' பொம்மை

தெருவில் வருகின்ற
சவ்வு மிட்டாய்காரனிடம் கூட ...
'காதல்' பொம்மை
செய்யச்சொல்லி ...
அடம்பிடிக்கிறது
உன் மீதான காதல்!

Thursday, July 10, 2008

புஷ்


"நகருங்க... நான் குழி தோண்டறேன்... நான்தான் அதில் எக்ஸ்பர்ட்...."

Tuesday, July 1, 2008

குசேலன் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!


தசாவதாரம் படத்தின் பரபரப்பு அடங்குதற்குள் தமிழ் ரசிகர்களை குசேலன் பரபரப்பு தொற்றிக் கொண்டது.ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என்றாலே அந்த படத்துக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதிலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? பரபரப்பு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.சரி.. விஷயத்துக்கு வருவோம். குசேலன் படத்தை பற்றிய இதுவரை வெளிவந்த ‌மற்றும் வெளிவராத தகவல்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பது போலவே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குசேலன் படத்தைப் பற்றி ஏதாவது புதிய தகவல் கிடைக்காதா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறோம்.*


கடந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம்தான் தமிழில் குசேலன் என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கிறது.* மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்தவர் மம்முட்டி. அ‌தே கேரக்டரில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.* இந்த படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு குசேலனுக்கு முதலில் குசேலடு என்று பெயரிட்டனர். அந்த பெயரை இப்போது கதாநாயகடு என்று மாற்றியுள்ளனர்.* இந்த படத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிக்கிறார் என்பது தெரிந்த சங்கதிதான். நயன்தாராவும் இந்த படத்தில் ஒரு நடிகையாகவே நடித்துள்ளார் என்பது புது தகவல்.* படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் பசுபதி நடிக்கிறார்.‌ வெயி்ல் படத்தில் பசுபதியின் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்தான் குசேலனில் பசுபதி நடிக்க சிபாரிசு செய்தார்.* ரஜினிகாந்தின் கிராமத்து தோழராக நடித்துள்ள பசுபதியின் மனைவியாக நடிகை மீனா நடித்திருக்கிறார். மலையாளத்திலும் மீனா இதே கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.* சந்திரமுகி படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று டைரக்டர் பி.வாசு விரும்பியதன் விளைவுதான் குசேலன் உருவாக ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுதவிர ரஜினியின் குரு டைரக்டர் பாலசந்தரும் விரும்பி கேட்டுக் கொண்டதும் குசேலன் உருவாக காரணமாகும்.* குசேலன் டைரக்டர் பி.வாசு இயக்கும் 55வது படம். * குசேலன் சூட்டிங் இதுவரை மொத்தம் 82 நாட்கள் நடந்துள்ளன. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில் ஒரே‌யொரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி. அந்த பாடலும் விரைவில் படமாக்கப்படவுள்ளது.* தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற உலக நாயகனே பாடலைப்போலவே குசேலனில் இடம்பெறும் சினிமா... சினிமா... சினிமாதான்... எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் வந்ததிந்த சினிமாதான்...! என்ற பாடல் பட்டையை கிளப்பும் என்கிறார் டைரக்டர் பி.வாசு.* இந்த பாடலை சூப்பர் ஸ்டாருக்காகவே ஸ்பெஷலாக எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.* இந்த பாடலில் ரஜினிகாந்துடன், நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், நடிகைகள் த்ரிஷா, மம்தா உள்ளிட்டோரும் பங்குபெறவுள்ளனர். மொத்தம் 30 நடிகர் -நடிகைகள் இந்த பாடலில் தோன்ற உள்ளனர்.* இந்த பாடல் 75 ஆண்டு தமிழ்சினிமா வரலாற்றை திரும்பிப் பார்க்கும் வகையில் உருவாக்கப்படவிருக்கிறதாம்.* குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கியுள்ளது.* படத்தில் சூப்பர் ஸ்டார் சிவாஜி படத்தை விட இளமையாக தோன்றுகிறார். குசேலன் படத்தின் ஸ்டில்களே அதற்கு சாட்சி.* குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பசுபதி, நயன்தாரா, மீனா, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, பாத்திமா பாபு, தியாகு, கீதா, சோனா, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் பி.வாசுவும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.* நடிகர் திலகம் பிரபு, விஜயகுமார், மதன்பாப், நிழல்கள் ரவி, சினேகா, குஷ்பு, த்ரிஷா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். அதாவது கால்ஷீட் கேட்பது, சூட்டிங்கில் பங்கேற்பது போன்ற காட்சிகளில் இவர்கள் தோன்றுகிறார்கள்.* குசேலன் படத்தின் ஆடியோ வருகிற 30ம் தேதி வெளியிடப்படுகிறது.* ஜுலை மாத இறுதியில் குசேலன் படம் ரீலிஸ் ஆகும் என்று டைரக்டர் பி.வாசு அறிவித்துள்ளார். ரீலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது

இந்தக் குளத்தில் காதல் எறிந்தவர்கள்

என்னைச்சுற்றி நடந்த காதல் நிகழ்வுகளையும் - எழுதிய, எழுதிக் கொடுத்த - வாங்கிய, வாங்க மறுத்த காதல் கவிதைகளையும் , பரிமாறிக்கொள்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் நிஜங்கள் சுடும்

"எதுவுமில்லாமல் இருக்ககூடாது என்பதற்காக ஏதாவது சொல்கிறேன். ஆனால் சொல்வதற்கு எதுவுமில்லை"

குருவி - மனதை பாதித்தது










விஜய்யும் த்ரிஷாவும் சின்ன வயசுல ஒரு குருவியை வளர்ப்பாங்களாம்;. அந்தக்குருவியின் முதுகில் ஒரு மச்சம் இருக்குமாம். இரண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்து வீடு. அந்தக் குருவி இரண்டு பேரின் அன்பையும் பெற்றிருக்கும். அந்தக் குருவியைப் பார்;த்து இரண்டுபேரும் ஒரு பாட்டு கூட பாடுவாங்களாம்.பின் விஜய் குடும்பமும் த்ரிஷா குடும்பமும் தனித்தனியே பிரிந்து போய்விட. அந்தக் குருவி மட்டும் அநாதையாய் அந்த இடத்தில் இருக்குமாம்.16 வருடங்களுக்குப் பிறகு பட்டணத்தில் விஜய் மீது ஒரு காகம் எச்சில் போட முயன்றபொழுது, எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று காகத்தின் அந்த எச்சத்தை தன் மீது தாங்கிக் கொள்ள,விஜய்க்கு அதனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்திடுமாம். அந்தக்குருவியை கையில் எடுத்து எச்சிலை துடைக்கும்பொழுது கவனிப்பாராம். அது சின்ன வயதில் தான் வளர்த்த குருவியேதான்பின் ஒரு பாடல் பாடுவாராம்.

இன்னிசைப் பாடிவரும்
இந்தக்குருவிக்கு குஷ்டமில்லை
குருவிகள் இல்லையென்றால்
எந்த அருவிக்கும் நஷ்டமில்லை

என்று சுவிட்சர்லாந்து மலை உச்சியில் நின்று பாடல் பாட அந்தப்பாடல் தான் சின்ன வயதில் கேட்ட பாடல் அல்லவா என்று சென்னை அண்ணாசாலையில் சந்து முனையிலிருந்து , த்ரிஷா சுவிட்சர்லாந்துக்கு ஓடி வந்து விஜய்யுடன் சேர்ந்து பாட்டு பாடி இறுதியாக பாபநாசம் அணையில் வந்து தங்களது நட்பை காதலாக புதுப்பித்துக் கொள்வார்களாம்.இதன் பிறகு தான் கதையில் திருப்புமுனையே. ஆம் தான் விஜய் மீது எச்சம் போடுவதை தடுத்த குருவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த காகம் குருவியை பழிவாங்க அலையுமாம். தங்களை சேர்த்து வைத்த குருவியை காகத்திடமிருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று விஜய்யும் த்ரிஷாவும் துப்பாக்கியோடு திரிவது கதையில் சிறப்பம்சம்.

அறை எண் 305ல் வயிற்றெரிச்சல்

அன்புள்ள சிம்புதேவனுக்கு ,

தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி. உங்களின் தனித்திறமையை முழுமையாக பாராட்ட முடியாத நிலையில் இருக்க காரணம் எல்லாரும் விழுகின்ற குட்டையில் நீங்களும் விழுந்து சகதிகளை அப்பிக்கொண்டதுதான்.பொருளாதார ஏற்ற இறக்கமா , இல்லை கலாச்சார சீரழிவா, இல்லை பக்கத்து தெரு குழாயில் தண்ணீர் வரவில்லையா? உடனே சாப்ட்வேர் இஞ்சினியர்கள்தான் காரணம் என்று கொடிபிடிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள்.அது என்னப்பா ? உங்கள் வீட்டு கழிவறை சுத்தமில்லையென்றால் கூட சாப்ட்வேர் இஞ்சினியர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகின்றீர்கள்?அந்தப்படத்தில் ஒரு காட்சி சாப்ட்வேர் இஞ்சினியர்களை பெரிதும் வேதனைப்படுத்தியிருக்கின்றது. இரண்டு படம் எடுத்துள்ளீர்கள் என்கிற பெருமை அந்த ஒரு காட்சியில் தரைமட்டமாக்கிவிட்டீர்கள்."ஜாவா என்கிற கணிப்பொறி மொழி அறிந்த ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், குறைந்த காலகட்டத்திற்குள் பைக், கார், ஹெலிகாப்டர் வாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதான காட்டியுள்ளீர்கள். இப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளின் தாக்கங்களை அதிகபட்டசமாக காட்டியுள்ளீர்கள்தான் எனினும் அப்படிபட்டவர்களை பழிவாங்குவதற்காக, கடவுளாக இருப்பவர்கள் அவர்களின் கைகளை சூம்பிப்போவ வைப்பதாக காட்டியுள்ள உங்களின் மட்டமான ரசனையை என்னவென்று சொல்வது? "ஆடைகள் குறைய குறைய கொட்டிக் கொடுக்கும், பெண்களின் மறைக்கப்படவேண்டிய உறுப்புகளின் மீது, பம்பரமும், ஆம்லெட்டும், போட்டு சாப்பிடுகின்ற சினிமாத்துறையினரை விடவா சாப்ட்வேர் இஞ்சினியர்கள் அதிகமாக சம்பாதிக்கின்றார்கள்?சரி அப்படிப்பட்ட சம்பாத்தியத்தின் பிண்ணணியை ஆராய்ந்து பார்த்ததுண்டா?அவர்களை வெட்டியாக உட்கார வைத்தா சம்பளம் கொடுக்கின்றார்கள். அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை,விபச்சாரம் செய்து பிழைக்கவில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவில்லை, லஞ்சம் வாங்கவில்லை. திறமைக்கு கிடைக்கின்ற ஊதியத்தில் ஒழுங்காக வருமானவரி கட்டுகிறவர்கள். அவர்களைப் பற்றியா இப்படி மட்டகரமான கற்பனையில் காட்சி எடுத்துள்ளீர்கள். அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?மற்ற துறைகளைப் போல அல்ல இது. இந்தப் பணியில் இருந்து எப்பொழுது தூக்கிவீசப்படுவார்கள் என்கிற உத்திரவாதம் இல்லை.ஒரு ப்ராஜக்ட் ஆரம்பித்துவிட்டால் அதற்கு டெட் லைன்(Dead Line), உயிரோடு இருக்கும் லைன் என்று குறிப்பிட்ட காலகட்டத்தை நிர்ணயித்து அதற்குள் முடித்துவிடவேண்டிய கட்டாயத்திற்குள் பரபரப்பான சூழ்நிலையில் பணிபுரிபவர்கள்.சிலநேரங்களில் இரவு பகல் பார்க்காமல் விழித்திருந்து அரைத்தூக்கம் தூங்கி, இப்படி உடல் வருத்தி பார்க்கின்ற வேலைக்காகத்தான் அவர்களுக்கு சம்பளமேயன்றி, உங்கள் துறையினர் பலரைப் போல பெண்களை அறைகுறையாக காட்டியோ, பாலுணர்வுகளைத்தூண்டியோ சம்பாதிக்கவில்லைஉங்கள் துறையில் சம்பாதிப்பவர்களை மிஞ்சிவிடக்கூடாதே என்கிற வயிற்றெரிச்சலிலா ?அப்படிப்பட்ட காட்சியை நீங்கள் எடுத்துள்ளீர்கள்? யதார்த்தங்களை படமாக்குவதற்கு முன் அவர்கள் வாழுகின்ற சூழலுக்குள் சென்று அவர்களின் உண்மையான நிலையினை உணர்ந்து கொள்ளுங்கள்.சாப்ட்வேர் இஞ்சினியர்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள் என்கிற கூப்பாடுகள் வெளிப்படுகின்றதே தவிர அவர்கள் அந்தச் சூழலில் படுகின்ற அவதிகளையும் படம் எடுத்தீர்கள் என்றால் பாராட்டலாம்.அவர்களின் கைகள் சூம்பிப் போகுமாறு நீங்கள் காட்டியுள்ள காட்சியில் உங்கள் கற்பனை ரொம்பவே சூம்பிப்போயிருப்பது தெரிகின்றது சிம்புதேவா!ஒரே ஒரு வேண்டுகோள், அறை எண் 305ல் கடவுள் படத்தின் தலைப்பை அறை எண் 305ல் வயிற்றெரிச்சல் என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். வருத்தங்களோடு ஒரு வாழ்த்துக்கள்

இப்படிக்கு வேதனையுடன்,
ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர்